உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.6 திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைக்காக குடும்பநல நீதி மன்றத்தை அணுக முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்ததாகவும், 2016-ஆம் ஆண்டு முதல் ஜோசப் தனியாக வசித்துவருவதால் தங்களை சேர்த்துவைக்க வேண்டும் என்று கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனக்கும், கலைச்செல்விக்கும் திருமணம் நடக்க வில்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரிக்கக்கோரி ஜோசப் பேபியும் மனு தாக்கல் செய்தார். இரு மனுக் களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது.
சட்டப்பூர்வ உரிமை இல்லை
அதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் ஆகியோர் விசா ரித்தனர். முடிவில், பணப் பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்கள் மூலம் தெரிவ தாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும் தீர்ப்பில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி உள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்பநல நீதிமன் றத்தை நாடுவதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை’ என்று கூறி உள்ளனர்.
No comments:
Post a Comment