ஒன்றிய அரசுக்கு லாலுபிரசாத் எச்சரிக்கை
பாட்னா,நவ.6- கடுகு எண்ணெய் ஒரு லிட்டர் விலை கடந்த ஜூலை மாதத்தில் ரூ235லிருந்து செப்டம்பர் மாதத்தில் ரூ.265 விலை அதிகரித்துள் ளதை படத்துடன் எடுத்துக்காட்டி ஒன்றிய அரசுக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில மேனாள் முதலமைச்சருமான லாலுபிரசாத் தம்முடைய சுட்டுரைப் பக்கத்தில் எண்ணெய் பாட்டில்களின் இரு மாத (ஜூலை, செப்டம்பர்) இடைவெளியில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை (ரூ.30 உயர்வு) ஒப்பிட்டு, அப்பதிவில் குறிப் பிடுகையில், "கடுகு எண்ணெய் விலை என்ன? அதனால் மகிழ்ச்சி அடை கிறீர்களா? மூன்று வேளாண் கருப்புச் சட்டங்களால் அடுத்த இரண்டு ஆண்டு களில் எதிர் விளைவுகள் ஏற்படும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment