குஜராத்தில் தீண்டாமைக் கொடுமை: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியருக்கு வீடு தர மறுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

குஜராத்தில் தீண்டாமைக் கொடுமை: தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியருக்கு வீடு தர மறுப்பு!

பள்ளிக்கு தினமும் 150 கி.மீ. தூரம் பயணிக்கும் அவலம்

அகமதாபாத், நவ.3- தீண்டாமைக் கொடு மையால் தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த ஆசிரியருக்கு வீடு தர மறுத்த தால், அவர் தினமும் 150 கி.மீ. தூரம் பய ணம் செய்து பணியாற்றும் பள்ளிக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், சுரேந்திரா நகர் மாவட்டம் சுடா தாலுகாவுக்கு உட்பட்ட சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னையா லால் பரையா (50). பள்ளி ஆசிரியரான இவர், கடந்த சில மாதங் களுக்கு முன்பு, அதே மாவட்டத்தில் உள்ளநினமாஎனும் கிராமத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளி யானது அவருடைய சொந்த ஊரில் இருந்து சுமார்  75 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்துள்ளது. தூரம் அதிக மாக இருக்கும் காரணத்தால் பள்ளிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு ஒன் றைத் தேட ஆரம் பித்து இருக்கிறார்.

ஆனால் ஆசிரியர் கன்னையாலால் பரையா, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த கிராமத்தில் இருந்தவர்கள் வாட கைக்கு வீடு தர மறுத்துள்ளனர். இதனால், ஆசிரியர் கன்னையாலால் பரையா, வேறு வழியில்லாமல் தினமும் 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்குச் சென்று வருகிறார்.

இதுதொடர்பான செய்தி தற்போது ஊடகங்களில் வெளியான நிலையில், ஆசிரியர் ஒருவருக்கே வீடு தராத அளவிற்கு குஜராத் கிராமங்களில் நில வும் ஜாதிய தீண்டாமைக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அவலம் குறித்து செய்தியாளர் கள் கன்னையாலாலிடம் கேட்டதற்கு,

என்னுடைய இந்த நிலைமை குறித்து, குஜராத் முதலமைச்சர் பூபேந் திர படேலிடம் தெரிவித்ததோடு, வேறு ஏதாவது ஒரு ஊருக்கு என்னைப் பணி இட மாற்றம் செய்துவிடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். இருப்பி னும், அதற்கு முறையான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லைஎன்று மிகுந்த வேதனையுடன் பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment