ஒன்றிய இணை அமைச்சரின் தற்பெருமையை உடைத்து நொறுக்கிய பெண் தொழிலாளி
பாட்னா, நவ.3- ஈ-ஷ்ரம் கார்டை இல வசமல்ல; பணம் கொடுத்தே வாங்கி னேன் என்று சொல்லி, ஒன்றிய இணை யமைச்சரின் தற்பெருமையை உடைத்து நொறுக்கினார் பெண் தொழிலாளி.
நாடு முழுவதுமுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக ஒன்றிய அர சால் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தளம் தான் ‘ஈ-ஷ்ரம்’ (e-shram) ஆகும். அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து, சமூக நலத் திட்ட உதவிகளை அவர்களுக்கு நேரடியாகவே வழங்குகிறோம் என்ற பெயரில் இந்த தளம் துவங்கப்பட்டது.
இந்தத் தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்து, அடையாள அட்டையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந் தது.
இந்நிலையில், பீகார் தலை நகர் பாட்னாவில் ‘ஈ-ஷ்ரம் கார்டு’ வழங்கும் நிகழ்ச்சியில், ஒன்றிய தொழிலாளர் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, பீகார் மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்று கார்டுகளை வழங்கியுள்ளனர்.
அப்போது, கிரண்தேவி என்ற பெண் தொழிலாளி கார்டைப் பெறுவதற்கு மேடையில் ஏறியபோது, ‘ஈ-ஷ்ரம் கார்டு’ இலவசமாகத்தானே பெற்றீர்கள்? என்று ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் தெலி கேட்டுள்ளார்.
ஆமாம், என்று கிரண்தேவி கூறுவார் என்பது ராமேஸ்வர் தெலியின் எண்ணம். மாறாக, “இலவசமாகவா... இல்லையே..! 100 ரூபாய் கொடுத்துத்தானே ‘ஈ-ஷ்ரம்’ கார்டை வாங்கினேன்” என்று கிரண் தேவி மேடையிலேயே அமைச் சரின் தற் பெருமையை உடைத்து நொறுக்கினார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ராமேஸ்வர் தெலி.. “அப்படியா.. அவ் வாறு செய்யக்கூடாதே.. 100 ரூபாய் வசூலித்ததுபற்றி உடனடியாக விசா ரணை நடத்த உத்தரவிடுகிறேன்” என்று சாமர்த்தியமாக மழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment