சென்னை, நவ. 6- சுற்றுச் சூழலை பாதுகாக்க `தமிழ் நாடு பசுமை பருவநிலை நிறுவனம்' தொடங்க அனுமதி அளித்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பருவநிலை மாற்றம் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற் படுத்துகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், வெப்பஅலை காரணமாக உடல்நலக் குறைவுகள், உயிரிழப்பு, உணவுப்பற்றாக்குறை என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
விவசாயம் பாதிக்கப் படுவதால் கிராமப்புற மக் களின் வாழ்வாதாரமும், கடல் மீன் வளம் குறைவ தால் கடலோரப் பகுதிக ளில் வசிக்கும் மீனவர்க ளின் வாழ்வாதாரமும் கடு மையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், "தற்போது தமிழ்நாட்டின் மொத்த நிலப் பரப்பில் 23.27 சதவீதமாக உள்ள பசுமைப்பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சத வீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும். பருவ நிலை மாற்றத்தால் ஏற் படும் பாதிப்புகளை எதிர் கொள்ள ரூ.500 கோடி யில் தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் தொடங் கப்படும். அடுத்த 5 ஆண் டுகளில் ரூ.150 கோடியில் தமிழ்நாட்டில் 100 சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு,அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் தொடங்கப்படும்’’ என்று தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை உரையில்நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்த 3 இயக்கங்களை யும் சிறப்பாக செயல் படுத்த தமிழ்நாடுபசுமை பருவநிலை நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரி, சுற்றுச்சூழல், வனத் துறை சார்பில் அரசுக்கு கருத் துரு அனுப்பப்பட்டது.
அதை பரிசீலித்து, ரூ.5 கோடியில், நிதித் துறை ஒப்புதலுடன்தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறு வனத்தை தொடங்க தமிழ் நாடு அரசு சமீபத்தில் அர சாணை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment