நீட் தேர்வால் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

நீட் தேர்வால் தற்கொலை

 

சேலம், நவ. 6- சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அரு கில் உள்ள வடகுமரை கிராமத்தில் உள்ள கணேசன்-தனலட்சுமி இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள னர். இவர்களது மகன் .சுபாஸ்சந்தி போஸ். இவர் தாகூரில் பன்னிரண்டாம் வகுப்பு 2019ஆம் ஆண்டு முடித்து விட்டார். மேலும் மருத்துவர் ஆக விரும்பி உள்ளார்.

அதனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்றர். இதில் இரண்டு முறை தோல்வி அடைந்த பின்பும் மூன்றாவது முறை தேர்வு எழுதியுள்ளார்.   தேர்வின் முடிவு  2.11.2021 மாலை வெளியிடப்பட்டது.  தேர்வில் 261 மதிப் பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன அழுத்தம் காரணமாக அன்று இரவு பெற்றோர்களுக்கு தெரியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்பு பெற்றோர்களுக்கு தெரிந்து சேலம் தனியார் மருத் துவமனையில் நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி இன்று 6.11.2021 அதிகாலை ஒரு மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார்

விடுதலைப் போரில் தமிழகம்ஒளிப்பட

 கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

சென்னை, நவ. 6- கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவிடுதலைப் போரில் தமிழகம்என்ற தலைப்பிலான ஒளிப்பட கண்காட்சி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்விடுதலைப் போரில் தமிழகம்என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி திறந்து வைத்தார்.

1 முதல் 8ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒளிப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்

வருகிற 18ஆம்தேதி வரை நேரடி சேர்க்கை

சென்னை, நவ. 6- சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

சென்னை புதுவண்ணை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 2021ஆம் ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் சேர விரும்புவோர் வருகிற 18ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடக்கிறது. பயிற்சியில் சேர விருப்பமுள் ளவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை நேரில் அணுகி பயிற்சியில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment