சமூகவலை தளத்திற்குள் புகுந்து அவதூறு தகவல்களை வெளியிட்ட பாஜக பெண் நிர்வாகி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

சமூகவலை தளத்திற்குள் புகுந்து அவதூறு தகவல்களை வெளியிட்ட பாஜக பெண் நிர்வாகி கைது

திருச்சி, நவ  6-  திருச்சியைச் சேர்ந்த காளீஸ்வரன் என் பவரது சமூகவலைதளத் தில் வேறு ஒருவர் தவ றான ஆபாச பதிவுகளைப் பதிவதாகவும் தனது பெயரில் அரசு குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகள் வருவதாவும் இதற்கு தான் பொறுப்பல்ல என்றும் மேலும் தனது சமூகவலைதளத்தில் இவ்வாறான பதிவுகள் வருவதால் தன்மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஆகவே இதைச்செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறியிருந்தார்.

 இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தியதில் திருச்சி கருமண் டபம் பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் பிரமுகர் திலகா என்பவர் மதுரை யைச்சேர்ந்த ரவிக்குமார் என்பவருடன் சேர்ந்து சமூகவலைதள கடவுச் சொல்லை திருடி இவ் வாறு அவதூறான பதிவு களை இட்டுவந்தது தெரிந் தது. இதனைஅடுத்து திருச்சி காவல்துறையி னர் திலகா மற்றும் ரவிக் குமாரைக் கைது செய்தனர்.

No comments:

Post a Comment