பக்தி எங்கே போகிறது? சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு சவுக்கடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

பக்தி எங்கே போகிறது? சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு சவுக்கடி

ஜன்கிரி, நவ. 6- சத்தீஸ்கரில் கோவர்த்தன பூஜையின் ஒரு பகுதியாக நடை பெற்ற சடங்கில் முதல மைச்சர் பூபேஷ் பாகேல் சவுக்கால் அடிக்கப்படும் காட்சி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் உள் ளிட்ட சில வட மாநிலங் களில் தீபாவளிக்கு அடுத்த நாள் பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக தூக்கி மக்களை காத்தார் என்ற நம்பிக்கையின்படி கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. சத்தீஸ்கரில் ஆண்டு தோறும் துர்க் மாவட்டம் ஜன்கிரி என்ற கிராமத்தில் நடக்கும் பூஜையில் முத லமைச்சர் பூபேஷ் பாகேல் கலந்து கொள்வார். பூஜையின் ஒரு பகுதியாக நடக்கும் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு சவுக் கடி வழங்கப்படும். இதன் மூலம் பிரச்சினைகள் நீங்கி வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு நடந்த கோவர்த்தன பூஜையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார். பூஜையின் போது பூபேஷ் பாகேல் தனது வலது கையை நீட் டியபடி 8 சவுக்கடிகளை பெற்றுக் கொண்டார். அப்போது பூஜையில் பங்கேற்க வந்தவர்கள் இந்தக் காட்சியை பார்த் தனர். கடந்த ஆண்டும் இதேபோல பூஜையில் கலந்து கொண்டு பூபேஷ் பாகேல் சவுக்கடி வாங்கிக் கொண்டதுடன், தான் சவுக்கடி வாங்கும் காட் சியை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள் £ர்.

இந்தக் காட்சி சமூக வலை தளங்களில் வைர லாகி வருகிறது. ‘இது போன்ற சடங்குகள் விவ சாயிகளின் நன்மைக்கா கவே பின்பற்றப்படுகின் றன. இவை நம்மை பணி வாக வைத்திருக்கும்’’ என்று முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். துயரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மாநில நலனுக்காகவும் ஆண்டு தோறும் இந்த பூஜையில் பூபேஷ் பாகேல் கலந்து கொள்கிறார் என்று முத லமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment