நியூயார்க், நவ.5 வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீனாவும், ரஷ்யாவும் அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றன.
வடகொரியா முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோது அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் அந்த நாட்டின் மீது முதலில் பொருளாதார தடை விதித்தது. அதன்பின்னர் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோது, ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோது பொருளாதாரத் தடைகளை மென் மேலும் இறுக்கியது.
இதன் காரணமாக அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மற்றொரு புறம் கரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க அந்த நாடு தனது எல்லைகளை மூடி வைத்திருப்பதால் உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டிருப்பது அங்கு பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொரு ளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் கூட்டாக குரல் கொடுத் துள்ளன. இது தொடர்பாக அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.
இதையொட்டி ஒரு வரைவுத் தீர்மானத்தை தயார் செய்து அதை உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விட் டுள்ளன.
இந்த தீர்மானத்தில், வட கொரியாவின் பொருளாதார சிக்கல்கள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. மேலும், அந்த நாட்டு பொதுமக்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
முக்கிய பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டால், வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், ஜவுளி ஏற்றுமதியில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடகொரிய நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment