உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இதன்மூலம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது, குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.
அதேநேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிகால் வலி. இதைத் தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்:
* உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிகால் வலி ஏற்படும்.
* காலணிகளை காலுக்கு தகுந்தவாறு அணியாமல், பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிகால் வலி உண்டாகும்.
* ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி வரலாம்.
* அதிக நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதாலும் குதிகால் வலி ஏற்படும். இதனை ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ எனக் குறிப்பிடுவார்கள்.
* உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையைக் குறைக்கலாம். இதன்மூலம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
* திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிகால் வலி கட்டுப்படும்.
* வில்வக்காயை நெருப்பில் சுட்டு, அதைக்கொண்டு குதிகாலில் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும். பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment