பணியாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் மின் வாரியம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 29, 2021

பணியாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் மின் வாரியம் உத்தரவு

சென்னை, நவ.29 அலுவலக நேரத்தில் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும், அய்.டி., கார்டு எனப்படும் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, இரு நிறுவனங்களாக செயல்படுகிறது.அந்நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ளன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பொறியாளர்கள் பணிபுரிகின்றனர்.மின் வாரியம், உபகரணம் கொள்முதல் உள்ளிட்ட பல பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்கிறது.

அந்நிறுவனங்களின் ஊழியர்கள், மின் வாரிய அலுவலகத்திற்கு தினமும் வருகின்றனர். சிலர் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளின் அறைகளில் அமர்ந்து, மணிக்கணக்கில் பேசியபடி உள்ளனர். இதனால், பாதுகாவலர்களால் வெளி நபர்களை அடையாளம் காண முடிவதில்லை.

இதையடுத்து, 'மின் தொடரமைப்பு கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும், அலுவலக நேரத்தில் ஒளிப்படம் தெரியும்படி, அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

இதுதொடர்பாக தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தவேண்டும்' என, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment