ஒரு முக்கிய அறிவிப்பு
5.11.2021 முதல் கழகத் தலைவரின் ஆணைப்படி திராவிடர் கழகத் துணைத் தலைவர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
வழக்கமான கலந்துரையாடல்களாகக் கருதாமல், பொறுப்பாளர்கள் மட்டும் வந்தால் போதும் என்று கருதாமல், மாவட்ட அளவில் கழகத் தோழர்கள் (இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி உள்பட) அனைவரும் பங்கேற்க வேண்டும். காணொலி மூலம் கழகத்துக்குக் கிடைத்த புதிய வரவுகள் (இருபால் மாணவர்கள்) கண்டிப் பாகக் கலந்துகொள்ளும் வகையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அமைப்புச் செயலாளர்களும் அதில் கவனம் செலுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் - இது மிகவும் முக்கியம்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment