லால்குடி வட்டம், பெரு வளப்பூர் திராவிட இயக்கத் திற்கு அருமையான தோழர் களைத் தந்த ஊராகும் (டாக்டர் தருமலிங்கம் போன்றவர்கள்). அந்தவூருக்குச் சொந்தக்காரர் மறைந்த 'மலர்மாமணி' புலவர் பெ.அ. இளஞ்செழியன் (வயது 83) ஆவார். இராமலிங்கம் என்ற பெயரை மாற்றிக் கொண்டவர். பல நூல்களை இயற்றியவர். உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை மற்றும் இந்திய - மலேசியப் பண்பாட்டுக் கழகம் - இவைகளுக்குத் தலைவராக இருந்து சிறப்பான பணிகளை செய்தார்.
பெரியார் திடலுக்கும், நமக்கும் நெருக்கமான தோழர் அவர். திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவர். தன் இரு மகன்களுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவர். கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முந்தைய (31.10.2021) நாள் மறைந்தார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், விரிந்தஅவரது நண்பர்கள் குழாமிற்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2-11-2021
No comments:
Post a Comment