சென்னை, நவ.28 சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறு வோர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி தேசிய மூத்த வயதானோருக்கான ஓய்வூதியம், தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், தேசிய கைம்பெண்கள் ஓய்வூ தியம், தேசிய ஆதரவற்ற கைம்பெண் கள் ஓய்வூதியம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், முதலமைச் சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், 50 வயதிற்கும் மேற்பட்ட திருமணம் செய்யாத ஏழை பெண் ஓய்வூதியம் ஆகிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆதார் எண் அவசியம்
இந்த திட்டங்களை அமல் படுத்தும் முகமைகள் மூலம், மாநில அரசு நிதியில் இருந்து தலா ஒருவ ருக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஒன்றிய ஆதார் (நிதி மற்றும் மானிய சேவைகள்) சட்டப்படி இந்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது.
அதன்படி, இந்த திட்டத்தின்படி பயனடைய விரும்பும் தகுதியுள்ள அனைவரும் ஆதார் நம்பரை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண் ணுக்காக விண்ணப்பித்திருந் தால், அதற்கான பதிவு நம்பரை சமர்ப் பிக்க வேண்டும். ஆதார் நம்பர் இல்லாதவரோ அல்லது ஆதாருக் காக விண்ணப்பிக்காத வரோ இனி ஆதார் எண் பெறு வதற்கு விண்ணப் பிக்க வேண்டும்.
ஆதார் எண் பெறும்வரை...
அதற்காக ஆதார் பதிவு மய்யங்களை அணுகலாம். ஆதார் எண் பெறும்வரை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். என்றா லும் அவர்கள், சில அடையாள ஆவணங்களை அளிக்க
வேண்டும்.
அந்த வகையில், ஆதார் பதிவு அடையாள சீட்டு அல்லது ஆதார் எண் கேட்டு விண்ணப்பித்துள்ள கடிதத்தின் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, உணவுப் பங்கீட்டு அட்டை, பான் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் எண்ணை பெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சி யர்கள் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment