சென்னை, நவ.28 வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப் பத்திரம் வழங்குவதற்கு மாதந் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பரசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய தலை மை அலுவலகத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் தலை மையில் வாரியப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் 26.11.2021 அன்று நடைபெற்றது. அதில் அன்ப ரசன் பேசியதாவது:-
நடப்பாண்டில் குடியிருப்பு வாசிகளுக்கு 25 ஆயிரம் கிரை யப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப் பட்டுள்ள இலக்கை அடைய ஏதுவாகவும், ஏழை-எளிய மக்கள் கிரையப்பத்திரங்களை எளிதில் பெறும் வகையிலும் வாரிய திட்டப்பகுதிகளிலேயே மாதம் ஒருமுறை சிறப்பு முகாம்கள் நடத்தி, கிரையப் பத்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பயனாளிகளையே தேர்ந்தெடுக் காமல் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தகுதியான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க உரிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளவாறு 15 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட குடி யிருப்புகளில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை மழைக்காலம் முடிந் தவுடன் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
தரக் கட்டுப்பாடு
சிதிலமடைந்த குடியிருப்பு களை அகற்றி, மறுகட்டுமான திட்டத்தின்கீழ் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 500 குடியிருப்புகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுமான திட்டங்களுக்கான பணிகளை விரைவாக தொடங்கி ஏழை, எளிய மக்க ளுக்கு வீடுகளை வழங்க வேண்டும். வாரியத்தால் கட்டப் படும் புதிய குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற் கொள்ள 3-ஆம் தரப்பு தரக் கட்டுப்பாடு நிறுவனங்களாக அரசு பொறியியல் பல்கலைக் கழகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களு டன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனங்களை கொண்டு 18 திட்டப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அனைத்து புதிய திட்டப்பகுதிகளுக்கும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்படும்.
தொழில்திறன் பயிற்சிகள்
மழைக்காலங்களில் வாரிய திட்டப்பகுதிகளில் மழைநீர் தேங்காமலும், தாழ்வான பகுதி களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த குடியிருப்பு களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சமுதாய வளர்ச்சி பிரிவின் மூலம் தொழில்திறன் பயிற்சிகள், தொழில் தொடங்க நிதி உதவிகள் அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித் துறை முதன்மை செயலாளர் ஹித்தேஷ்குமார் எஸ்.மக் வானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்தராவ், இணை மேலாண்மை இயக்குநர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment