சென்னை அய்.அய்.டி.யில் அனைத்து நிகழ்வுகளிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

சென்னை அய்.அய்.டி.யில் அனைத்து நிகழ்வுகளிலும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும்

இயக்குநருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி கடிதம்

சென்னை, நவ. 28 எதிர்காலத்தில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த் திக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் .பொன்முடி கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை அய்.அய்.டி.யின் 58ஆவது பட்டமளிப்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  சென்னை அய்.அய்.டி. முன்பு போராட் டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி அவர்கள் சென்னை அய்.அய்.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு நேற்று (27.11.2021) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் 58-ஆவது பட்டமளிப்பு விழா 20,11,2021 அன்று நடத்தப்பட்டதை அறிவேன், தமிழ்நாடு அரசு வழங்கிய 250 எக்டேர் நிலப்பரப்பில் சென்னை அய்.அய்.டி. 1959ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அன்றில் இருந்து தமிழ்நாடு அரசு சென்னை அய்.அய்.டியின் வளர்ச்சிக்கும், மேம் பாட்டுக்கும் பல்வேறு வழிகளில் பங் களித்து வருகிறது. தற்போதைய அரசும் அதே ஆதரவை தொடருவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. கிரையோ எலக்ட்ரான் நுண்ணோக்கிக்கான தேசிய வசதியை நிறுவுவதற்கு, மாநில அரசின் ரூ.10 கோடி நிதியுதவியை கோரி சமீபத்தில்கூட  நீங்கள் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாள ருக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்.

உண்மைகள் இப்படி இருக்கையில், சமீபத்தில் முடிவ டைந்த பட்டமளிப்பு விழாவில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை, இது நெறிமுறைகளுக்கு மாறா னது. வருத்தம் அளிக்கிறது. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்  போன்ற உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் விழாக்கள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய மாநில அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது என் பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.எனவே எதிர்காலத்தில் சென்னை அய்.அய்.டி.யின் அனைத்து நிகழ்ச்சி களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அமைச்சர் . பொன்முடி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment