சென்னை நவ.4 அண்ணா பல்கலைக்கழகம் இனிமேல் நடத்தும் செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடி எழுத்துத் தேர்வாக நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.
கரோனா தொற்று காரணமாக செமஸ்டர் மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் இணையம் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், இனிமேல் செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் நேரடியாக எழுத்து தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
அதன்படி இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், உள்முறை, செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இனி நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் அதிகம் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறீர்கள் -அதே போல் பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்!
ஒன்றிய இணை அமைச்சரின் புதிய அறிவுரை
போபால், நவ.4 நாட்டில், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில், வரலாறு காணாத வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு, டில்லி, மகாராட்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், ஒன்றிய பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரேல், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல், நாடு முழுவதும் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இது பேதாதற்கு, சமையல் எரிவாயு உருளை விலையும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே கரோனா ஊரடங்கால் வாழ்வா தாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பெட்ரேல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு குறைக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த, ஒன்றிய இணை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனிப்பட்ட நபரின் ஊதிய உயர்வை நாம் ஏற்றுக் கொள்வது போல், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு அனைத்தையும் அரசு இலவசமாக கொடுக்க முடியாது. இதில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment