சிறீநகர்,நவ.4- ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தி யதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜக தலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
துபையில் அண்மையில் நடை பெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக் கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை சிலர் கொண்டாடிய போது, குறிப்பிட்ட மதத்தின ருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் மேனாள் மேல்சபைத் தலை வருமான விக்ரம் ரந்தாவா சில கருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணைய தளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சைக் கண்டித்தனர்.
அதையடுத்து, விக்ரம் ரந்தா வாவிடம் விளக்கம் கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் சுனில் சேத்தி தாக்கீது அனுப்பியுள்ளார்.
அந்த தாக்கீதில், "ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்க முடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், "விக்ரம் ரந்தாவாவின் கருத்து களைக் கேட்டதும் தனிப்பட்ட முறையில் எனது மனம் காய மடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் "அனைவருக்குமான வளர்ச்சி' என்ற லட்சியத்துக்கும் பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இவை முற்றி லும் எதிரானவை' என்று தெரிவித்தார்.
இதனிடையே, இந்த விவகா ரத்தில் காவல் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.
வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித் தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment