கொல்கத்தா, நவ.4 மேற்கு வங்க இடைத்தேர்தலில் மூன்று தொகுதி களில் வைப்புத் தொகையை இழந்தது பாஜக.மேற்கு வங்க இடைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.
மேற்கு வங்க மாநிலம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளி யாகியுள்ளன. இதில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனைத்து 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதுமட்டு மல்லாமல், பா.ஜ.க. வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப் பினரான டெரக் ஓபிரயன் ட்விட் டரில், நான்கு தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இரண் டாவது, முன்றாவது இடத்துக்கு பாஜகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையே கடும் போட்டி.
ஒன்றிய அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்துள்ளது. தின்ஹடா தொகுதியில் 1.5 லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் திரிணமூல் காங் கிரஸ் வெற்றி.
மொத்த நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ள னர் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தின்ஹடா, கர்தஹா, கோசபா, சாந்திபூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி களுக்கு அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடத்தப் பட்டு முடிவுகள் வெளியாகி யுள்ளன. அனைத்துத் தொகுதி களையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றி 75% வாக்கு சதவிகிதத் தையும் பெற்றுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற் பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் கதை முடிந்து விட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுவுகதா ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல் பாடுகளால் மக்கள் வருத்தப்படு கிறார்கள். இதைதான் தேர்தல் முடிவு காட்டுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜகவின் கதை முடிந்து விட்டது. நாங்கள் கடுமையாக போராடினோம். இடைத்தேர்தல் முடிவு எதிர் பார்க்கப்பட்டது போலவே அமைந்துள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய வன் முறைகள் எதுவும் இருக்கக்கூடாது என்று எங்கள் கட்சி அறிவுறுத் தியது. எதுவும் நடக்காது என்றார்.
No comments:
Post a Comment