சென்னை, நவ.4 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு செப்டம்பர் 2021 முடிவுகளை மதிப்பெண் பட்டியல்களாகவே நவ.9 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
''செப்டம்பர் 2021 மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக 09.11.2021 காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment