சென்னையில் கிராமியக் கலைஞர்கள் பங்கேற்கும் நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

சென்னையில் கிராமியக் கலைஞர்கள் பங்கேற்கும் நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது

சென்னை, டிச. 28- சென்னையில் 500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் நம்ம ஊரு திருவிழா ஜனவரி 14, 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செய லகத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று நடத்தப்பட்ட கலைபண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத் தில் கிராமிய கலைஞர்களை கொண்டு சென்னையில் கலை விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று மானிய கோரிக்கை நடந்த போது தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட் டார்.

அதில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம் பரிய கலைகளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் மாபெரும் கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்து ழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் 3 நாள்கள் நடத் தப்படும். இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட் டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி தமிழ்நாட் டைச் சார்ந்த பாரம்பரிய கலை ஞர்கள் பங்குபெறும் மாபெரும் கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமாகவும்) 3 நாள்கள் நடத்துவதற்கு ரூ.91 லட்சத்தை தொடரும் செல வினமாக அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.

அதை செயல்படுத்தும் வகையில் நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் தமிழ்நாட் டின் பாரம்பரியமான கிராமிய கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர் களை கொண்டு, சென்னையில் 7 இடங்களில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாள்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளிமாநில கிராமிய கலைக் குழுவினர் இவ்விழாவில் பங்கு கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

நம்ம ஊரு திருவிழாவை, சீரும், சிறப்புமாக நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத் தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தலை மையில் 27ஆம் தேதி (நேற்று) முதற்கட்ட ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறையின் அரசு முதன் மைச் செயலாளர் பி.சந்திர மோகன், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சந்தீப் நந்தூரி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ..ஜெயசீலன், மற் றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட் டுப்புறக் கலைஞர்கள் நலவாரி யத்தின் தலைவர் வாகை சந்திர சேகர் தலைமையிலான ஒருங் கிணைப்புக் குழுவின் உறுப் பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடத்தப்படுவ தைப் போன்றே இவ்விழாவை மதுரை, திருச்சி மற்றும் கோவையிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்கள், இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், அரசு உயர் அலுவலர்களாலும், கலைஞர்களாலும் தெரிவிக்கப் பட்ட கருத்துகளின் அடிப் படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment