பெங்களூரு, டிச. 3- பெங்களூருவில் இருவருக்கு புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற் றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அறிவித்து உள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருநாடக சுகாதாரத் துறை அமைச் சர் சுதாகர், செய்தியாளர்களிடம் கூறி யதாவது:
கடந்த 20ஆம் தேதி தென்னாப்பிரிக் காவில் இருந்து 66 வயதான ஒருவர் பெங்களூரு வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி கரோனா, டெல்டா வைரஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டிருந் தது. இதையடுத்து, அவரது மாதிரி டில்லிக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், அது ஒமைக்ரான் வைரஸ் என்பது உறுதியானது.
தனியார் விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின் றன. அவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர் உட்பட 212 பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் அடுத்த 7 நாள்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியைச் சேர்ந்த 46 வயது நபருக்கு கடந்த 21ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனை ஊழியரான அவரது மாதிரியை பரிசோதித்ததில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. அதேபோல வெளிநாட்டினருடன் தொடர்பும் வைத்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இவருடன் தொடர்பில் இருந்த 218 பேரை பரிசோதித்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதித்துள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் வைராலஜி நிபுணர்களின் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. அதேவேளையில் எச்சரிக்கை உணர்வுடன், போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஒமைக்ரான் பர வலை கட்டுப்படுத்தவும், கையாளவும் தேவையான மருத்துவ கட்டமைப்பு களை ஏற்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.
ஆர்டிபிசிஆர் சோதனை
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங் களில் இருந்து வரும் பயணிகளுக்கு பெங்களூரு பன்னாட்டு விமான நிலை யத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.
இந்த சோதனைக்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படு வதாக பயணிகள் முறையிட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக 3 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். மருத் துவமனைகளில் ஆர்டிபிசிஆர் பரிசோ தனைக்கு கட்டணமாக ரூ.500 வசூலிக் கப்படும் நிலையில், விமான நிலையத்தில் 10 மடங்கு அதிகமாக கட்டணம் வசூ லிப்பதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment