சென்னை, டிச. 3- தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய் தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி மாவட் டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த மழையால் ஆயிரக் கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் மக்கள் தொடர்ந்து 7 நாட்களாக மழை தண்ணீருக்கு நடுவே வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார் வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.12.2021) சென்னை யில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மாலை தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதிக்கு வந்தார். அங்கு மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த பகுதி மக்கள் பிரையண்ட்நகர் பகுதியில் மழைநீர் தேங்குவதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். அடுத்த ஆண்டு மழை பெய்யும் போது மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் வலியுறுத்தினர். கோரிக் கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பலர் மனு கொடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தினார். பின்னர் 3.45 மணிக்கு அம்பேத் கார் நகரில் ஆய்வு செய்தார். மாலை 4 மணிக்கு தூத்துக்குடி ஏ.வி.எம். மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து ரகுமத்நகர், முத்தம்மாள் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதை ஆய்வு செய்தார்.
மழைநீரை உடனடியாக வெளியேற் றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 4.50 மணிக்கு புதூர்பாண்டியாபுரம் அருகே மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள கால்வாயை ஆய்வு செய்தார். 5 மணிக்கு கார் மூலம் மதுரைக்கு புறப் பட்டு சென்றார்.
ஆய்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப் பிடாரம்), மார்க்கண்டேயன்(விளாத்தி குளம்), ஊர்வசி அமிர்தராஜ்(சிறீவை குண்டம்), மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருசிறீ, மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment