நிட்டி ஆயோக் அறிக்கை
புதுடில்லி, டிச.28 சிறப்பான சுகாதார செயல்பாட்டில் தமிழ் நாடு 2-ஆவது இடத்தில் இருப் பதாக நிட்டி ஆயோக் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. கேரளா முதல் இடத்திலும், உத்தரப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
2019_-2020 ஆண்டில் ஒட்டு மொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங் களை தரவரிசைப்படுத்தி, ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. சுகா தார செயல்பாட்டின் முக்கிய அம்சங்கள் அடங்கிய 24 அளவு கோல்கள் அடிப்படையில் 4-ஆவது ஆண்டாக இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதார அமைச் சகத்துடன் இணைந்தும், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியு டனும் பட்டியல் தயாராகி உள் ளது. இந்த பட்டியலில், பெரிய மாநிலங்களிடையே ஒட்டு மொத்த சிறப்பான செயல்பாட் டில், தொடர்ந்து 4-ஆவது ஆண் டாக கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 2-ஆவது இடத்தில் இருக்கிறது. தெலுங் கானா மாநிலம் 3-ஆவது இடத் தில் உள்ளது.
ஆனால், 2018-_2019 ஆண்டில் இருந்து சுகாதார செயல்பாட்டை அதிகரித்தவகையில் பெரிய மாநிலங்களிடையே கேரளா
12ஆ-வது இடத்துக்கும், தமிழ் நாடு 8-ஆவது இடத்துக்கும் தள்ளப்பட் டுள்ளன.
இந்த பட்டியலில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம் ஆகி யவை கடைசிக்கு முந்தைய 2 இடங்களில் உள்ளன. ராஜஸ் தானும் மோசமான இடத்தில் உள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டில் இருந்து செயல் பாட்டை அதிகரித்தவகையில், உத்தரப் பிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சிறிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில், ஒட்டுமொத்த சுகா தார செயல்பாட்டில் மிசோரம், திரிபுரா ஆகியவை முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
யூனியன் பிரதேசங்களிடையே டில்லி, காஷ்மீர் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன. ஆனால், முந்தைய ஆண்டில் இருந்து செயல்பாட்டை அதிகரித்தவகையில் முதல் இடங்களை பிடித்துள்ளன.
No comments:
Post a Comment