15-18 வயதினருக்கான கரோனா தடுப்பூசி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

15-18 வயதினருக்கான கரோனா தடுப்பூசி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச.28 இந்தியாவில் 15- முதல் 18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிக்கு ஜனவரி

1-ஆம் தேதி முதல்  செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட் பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் கண்ட றியப்பட்ட ஒமைக்ரான் இந்தி யாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கரோனாவை வெல் லும் பேராயுதமான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்  27.12.2021 அன்று 16-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3ஆம்தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி   அறிவித்தார். இதேபோல் ஜனவரி 10ஆம்தேதி முதல் சுகா தார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் 15-18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் ஆர். எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

இதன்படி கரோனா தடுப் பூசிக்கான கோவின் இணைய தளத்தில் சென்று, 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன் பதிவு செய்ய, ஆதார் அட்டை இல்லாதவர்கள், 10ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைக் காட்டி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு ஏற்பாடாக, கோவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டி யலில் 10ஆம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இணையதளத் தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment