ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை பன்னாட்டளவில் 11,500 விமானங்கள் ரத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை பன்னாட்டளவில் 11,500 விமானங்கள் ரத்து

புதுடில்லி,டிச.28- கடந்த மூன்று நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்தாகி யுள்ளன. பன்னாட்டு விமானப் போக்குவரத்துகளை ஆய்வு செய்யும் ஃப்ளைட் அவேர் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 4 நாள்களில் இதுவரை 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. திங்களன்று 3,000 விமானங்களும், செவ்வாயன்று 1,100 விமானங்களும் ரத்தாகியுள்ளன. ஒமைக்ரான் பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment