மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 51 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 51 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

சென்னை,டிச.28- சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், அந்த நோயாளிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த வார்டில் பணியில் இருந்த நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவர் களுடன் தொடர்பில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 60-க்கும் மேற்பட்டவர் களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 23 நோயாளிகள், 28 மருத்து வர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என மொத்தம் 51 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு (ஒமைக்ரான் தொற்று அறிகுறி) இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதை யடுத்து, 51 பேரின் மாதிரிகளும் ஒமைக்ரான் பரிசோதனைக்காக புனே, அய்தராபாத் ஆய் வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment