ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை டில்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்

 புதுடில்லி,டிச.28- நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவ தால் டில்லியில் நேற்று (27.12.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக அம்மாநில அரசால் வெளி யிடப்பட்ட அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப் பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட் டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக் கப்படுவார்கள்.

டில்லியில் தொடர்ந்து 2 ஆவது நாளாக 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஏற்கெ னவே, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, அரியானா, குஜராத், அசாம், கருநாடகா ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment