ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போது ஆணையம் பரிந்துரைகள் அளிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போது ஆணையம் பரிந்துரைகள் அளிப்பதா?

சீதாராம் யெச்சூரி கண்டனம்

புதுடில்லி,டிச.28- ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  அவ்வாணையம் தனது பரிந் துரை களை அளித்தமைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண் டனம் தெரிவித்துள்ளார்அவர் கூறியுள்ள தாவது:

ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் அநீதியானவைஅக்கிரமமானவை! 2011 சென்சஸ் கணக்குபடி காஷ்மீர் மக்கள் தொகை 68.8 லட்சம்ஜம்மு பகுதி மக்கள் தொகை 53.5 லட்சம்இந்த விகிதாச்சாரப்படி காஷ்மீருக்கு 51 தொகுதிகளும் ஜம்முவுக்கு  39 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும்ஆனால்காஷ்மீருக்கு 47 தொகுதிகளும் ஜம்மு பகுதிக்கு 43 தொகுதி களும் ஒதுக்கப்பட்டுள்ளனஇது அரசியல் உள்நோக்கம் கொண்டதுகாஷ்மீர் பகுதிக்கு இழைக்கப்படும் அநீதிமேலும் இந்த ஆணை யம் அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுஏன் இந்த அவசரம்இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment