சென்னை, டிச. 29- சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல் இணைவழி விசாரணை கிடையாது என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தஆண்டு மார்ச் மாத கடைசி வாரம் முதல் நேரடி விசாரணை நடைமுறை நிறுத்தப்பட்டு, வழக்குகள் இணைவழியில் காணொலி மூலம் நடந்து வந்தது.
பின்னர் ஊரடங்கு படிப் படியாக தளர்த்தப்பட்டதால் வழக்குகள் நேரடியாகவும், இணைவழி மூலமாகவும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இணை வழி விசாரணையின்போது வழக்குரைஞர் ஒருவர் இளம் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காணொலி காட்சிப்பதிவு சமூக வலை தளங்களில் வெளியாகியது.
இதையடுத்து, அந்த வழக் குரைஞருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதி பதிகள், அந்த வழக்குரைஞர் வரும் ஜன.20இல் நேரில் ஆஜராகவும், அவர் மீது சிபிசி அய்டி காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ள னர்.
அத்துடன், உயர் நீதிமன் றத்தில் இணைய வழி விசா ரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நடைமுறையில் நேரடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதி பதிகள், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, உயர் நீதி மன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் விடுத்த அறிக் கையில், ‘சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல் இணைவழி விசாரணை நிறுத்தப்பட்டுள் ளது. வழக்குகள் வழக்கமான முறையில் நேரடியாக விசாரிக் கப்படும்’ என தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment