புதுச்சேரி, டிச. 29- புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இரு வருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தென் ஆப்ரிக்காவில் கண் டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸான ஒமிக் ரான் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது வரை ஒமிக்ரான் தொற்று வெளிநாடு சென்று வந்தவர் களிடம் மட்டுமே கண்டறியப் பட்டது. எனவே வெளிநாட் டுப் பயணம் செய்து விட்டு வருவோர் தீவிர பரிசோத னைக்கு உட்படுத்தப்படுகின் றனர்.
புதுச்சேரியில் ராஜா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் லாஸ்பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகி யோர் கடந்த 7 ஆம் தேதி கொரோனாவால் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனும்திக்கப்ப்ட்டனர். இந்த இருவர் உள்ளிட்ட 20 பேரின் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதி ரிகள் ஒமிக்ரான் ஆய்வுக்கு பெங்களூரு அனுப்பப்பட்டது.
நேற்று மதியம் இந்த இரு வருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி ஆனது. அவர்கள் இருவரையும் தனி மைப்படுத்திய சுகாதாரத் துறை அவர்களுடன் தொடர் பில் இருந்தோரை கண்டுபி டித்துப் பரிசோதிக்க நடவ டிக்கை எடுத்துள்ளது. இவர் கள் இருவரும் வெளிநாடு செல்லாதவர்கள் என்பதால் சமூக பரவலால் பாதிக்கப்பட் டுள்ளதாகப் புதுவை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment