தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்வு

 சென்னை, டிச.29 தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.

இந்தியாவில் 600க் கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 16 பேர் குணமடைந்துவிட்ட நிலையில் 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில், நேற்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 4 பேரும், அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வந்த 3 பேரும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 6 பேர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர்.

ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், திருவாரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் 3 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment