தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் புதிய 50 பட்டயப் படிப்புகள் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் புதிய 50 பட்டயப் படிப்புகள் தொடக்கம்

சிவகங்கை, டிச.27 சிவகங்கையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல மய்யம் தொடக்க விழா நடந்தது. துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.

மண்டல மய்ய இயக்குநர் சம்பத்குமார், மாணவர் உதவி மற்றும் சேவைப்பிரிவு இயக்குநர் மகேந்திரன், புலத் தலைவர்கள் தனலட்சுமி, ரவிமாணிக்கம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவுக்குப் பிறகு துணைவேந்தர் பார்த்தசாரதி கூறியதாவது: சிவகங்கை மய்யம் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் பயன்பெறலாம். மேலும் தற்போது 50 குறுகிய கால சான்றிதழ் பட்டயப் படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. செவிலியர்களுக்கு மட்டுமே 10 படிப்புகளை கொண்டு வந்துள்ளோம். பாடங்களை இணையம் மூலம் கற்பிக்கிறோம். ஏற் கெனவே 81 இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன என்றார். கல்வி என்பது வேலைக்கு மட்டும்தான் என்ற எண்ணம் உள்ளது. கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வதுதான். ஜூலை முதல் ஜூன் வரை, ஜனவரி முதல் டிசம்பர் வரை என 2 கல்வியாண்டுகளாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment