புற்றுநோய்க்கு புத்தாக்க சிகிச்சை முறைக்கான கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 27, 2021

புற்றுநோய்க்கு புத்தாக்க சிகிச்சை முறைக்கான கருத்தரங்கம்

 சென்னை, டிச. 27- புற்றுநோயில் இருந்து விடுதலை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை  என்கிற பொதுநல தொண்டு அமைப்பின் சார்பில் சென்னையில் புற்றுநோய் குறித்த 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் டாக்டர் அனிதா ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாடு  முழுவதிலுமிருந்து 75இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகளை பகிர்ந்துகொண்டனர். புற்று நோய்க்கு தற்போது அளிக்கப்படும் சிகிச்சை நிலவரம், சிகிச்சை முறையில் புதிய செயல் திட்டங்கள் மருந்துகள்  அவற்றின் விலை தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.  வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் மருந்து வகைகளின் விலை நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால்  நம் நாட்டிலேயே இம்மருந்துகளை தயாரித்து விற்பனை செய்வது பற்றியும்  பலர் கருத்து தெரிவித்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் முறைகள் தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்றன.

No comments:

Post a Comment