பெங்களூரு,டிச.30-கருநாடகாவில் மதமாற்றத்தை தடுக்க கடந்த வாரம் மத மாற்ற தடை சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அரசு நிறைவேற்றியது. இதற்கு காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசுக் கட்சிஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கிறிஸ்துவ, முஸ்லிம் மத அமைப்பினரும், இடது சாரி தொழிற்சங்கத்தினரும் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹாசன் மாவட்டம் நிட்டூரை சேர்ந்த 50 ஹ்tஜ்தாழ்த்தப் பட்ட சமூக இளைஞர்கள், மசோ தாவை கண்டித்து இந்து மதத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறினர். இதுகுறித்து அம்பேத்கரிய செயற்பாட் டாளர் சுவாமி நிட்டூர் கூறியதாவது:
இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் ஜாதி ரீதியாக ஒடுக்கப் படுவதால் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு பவுத்தத்தை தழுவினார். நாங்கள் இந் துக்களாக இருந்தபோது தீண்டாமையை கடைப்பிடித்து, கோயிலுக்குள் அனும திக்க மறுத்தனர். நாங்கள் இப்போது சுதந்திரமாக உணர்கிறோம். எங்களை பின்பற்றி ஆண்டுதோறும் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம்தேதி நிறைய பேர் பவுத்தத்துக்கு திரும்புகின் றனர். எங்கள் செயல்பாட்டால் கோப மடைந்துள்ள பாஜக, மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. அரசமைப்புச் சட் டம், விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுக்க சுதந் திரம் அளித்துள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது.இவ்வாறு நிட்டூர் கூறினார்.
No comments:
Post a Comment