சென்னை, டிச.30 தமிழ்நாட்டில் வேகமாக பரவும் நோய் தொற்றை கட் டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (29.12.2021) காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப் பிரமணியன், நாடு முழுவதுமே கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னையிலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (29.12.2021) சென்னையில் 194 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், சென்னை அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ். காலனி 19ஆவது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைப்படுத் தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அனைவருமே முகக்கவசம் அணியவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறி வுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும் பியுள்ளனர். அனை வருமே அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர். இவர் களைத் தவிர 120 பேருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப் பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட் டுள்ளது. வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட் டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 15 முதல்18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 3ஆம் தேதி சென்னை போரூர் பகுதியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். மேலும், மாணவர்களுக்கு பள்ளி களிலேயே தடுப்பூசி செலுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ கத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங் களை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment