'நீட்' விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

'நீட்' விலக்கு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

சென்னை,டிச.30- நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு, கடந்த மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப் பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப் புகள், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப் பித்தது.

தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண் டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13ஆம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்றஅனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளு நரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் அவ்வப்போது ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின்பொதுச் செயலரும், கல்வியாளருமான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்தும்,அதன் மீது ஆளுநரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகையில் தகவல் கோரியிருந்தார்.

அதற்கு ஆளுநரின் சார்பு-செயலரும், ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரியுமான எஸ்.வெங்கடேஷ்வரன் கடந்த 17ஆம் தேதி அளித்துள்ள பதிலில், சட்ட மசோதா தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், நீட் விலக்கு மசோதா மீது, ஆளுநர் இன்னும் முடிவெடுக்க வில்லை என்றும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment