5 பவுன் வரை நகைக் கடன்கள் ரத்து தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

5 பவுன் வரை நகைக் கடன்கள் ரத்து தமிழ்நாடு அரசு தகவல்

புதுடில்லி, டிச.30 5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படுகிறது. யார் யாருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படும் பலன் கிடைக்கும் என்ற விவரம் அறிவிக்கப் பட்டுள்ளது.

தேனியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் .பெரியசாமி நேற்று (29.12.2021) செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

இந்திய அரசியல் வரலாற் றில் கூட்டுறவுத்துறை மூலம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நகைக்கடன் தள் ளுபடி என்ற திட்டத்தை அறிவித்து, கூட் டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வைத்துள்ள ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் கடன் களை தமிழ்நாடு முதலமைச் சர் மு..ஸ்டாலின் தள்ளுபடி செய்துள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கங் களில் 35 லட்சம் நகைக்கடன் வழங்கப்பட் டுள்ளது. அதில் 13 லட்சம் பேர் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி அளித்து அவர்கள் தங்களின் நகைகளை திரும்ப பெற இருக் கிறார்கள். அதற்கான உத்தரவு பிறப்பி க்கப்பட்டுள்ளது. அந்த கடன் தள்ளுபடி ரசீது அச்சடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.

ஏற்கெனவே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடன் ரூ.2 ஆயிரத்து 761 கோடியை தள்ளுபடி செய்துள் ளோம். விவசாயிகளுக்கான பயிர்க் கடன் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். நகைக் கடனில் ரூ.6 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள் ளோம். கல்விக்கடனை தள் ளுபடி செய்ய வேண்டும் என்று கேட் கிறார்கள். அதை முதல்-அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் யார் யாருக்கு நகைக்கடன் தள் ளுபடி கிடைக்கும் என்ற விவ ரத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மண்டல இணை பதிவாளர் களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் .சண்முக சுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தகுதி பெறாதவர்கள்

 இணை பதிவாளர்கள் அலுவலகத்தில் இருந்து பெறப் பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடன்களுக்கு சில நிபந்த னைகளின் அடிப்படை யில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி,

* ஏற்கெனவே 2021-ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் இடம் பெற் றுள்ள அவர்களின் குடும்பத் தினர்;

* நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள்;

* 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர் மற் றும் குடும்பத்தினர்;

* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற் றும் அவர்களின் குடும்பத்தினர்;

* கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்;

* அனைத்து அரசு ஊழி யர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்;

* குடும்ப அட்டை நம்பர், ஆதார் நம்பரை வழங்காதவர் கள் மற்றும் தவறாக வழங்கி யவர்கள்;

* எந்த பொருளும் வேண் டாத குடும்ப அட்டை வைத் திருப்பவர்:

* ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் 40 கிராமுக்கு மேலாக கடன் பெற்ற ..ஒய். குடும்ப அட்டைதாரர்கள் ஆவர்.

கள ஆய்வில்....

நிபந்தனைகளுக்கு உட் பட்டு கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறும் நகைக்கடன்தா ரரின் மாவட்ட வாரியான பட் டியல், இணை பதிவாளர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தகுதி பெறாத மற்றும் உத்தேச தகுதி பெற்றவர்களின் பட்டியலின்படி கள ஆய்வு மேற்கொள்ளும்போது, தகுதி பெற்றவராக தெரிந்தால் அவர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும்.

உதாரணமாக ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகிய வற்றை குறைபாடுடன் அளித் திருந்தால் அவர் தகுதி பெறாதவர் பட்டியலில் சேர்க் கப்பட்டு இருப்பார்.

கள ஆய்வில் அவரது ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண் முழுமை பெற் றிருந்தால் அவரும் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றவர் ஆகிறார்.

பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் பெற்ற பிறகே பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment