குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக்கள்

சென்னை, டிச. 29- சென்னையில் இடிக்கப்பட வேண்டிய குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை மதிப்பீடு செய்ய 5 நிபுணர் குழுக் களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை திருவொற்றியூரில் 27.12.2021 அன்று குடிசை மாற்று வாரிய கட்டடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம் ஆயின. இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப் புற வசிப்பிட மேம்பாட்டு வாரியத் தின் (குடிசை மாற்று வாரியம்) மேலாண்மை இயக்குநர் எம். கோவிந்தராவ் பிறப்பித்த உத்தர வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் 123 குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 61 திட்டங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலானவை யாகும். 61 திட்டங்களில் அதாவது 22 ஆயிரத்து 271 குடியிருப்புகளில் பாதிப்பு குறித்து ஏற்கனவே மதிப் பீடு செய்யப்பட்டது. அவற்றில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்பட வேண் டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 62 திட்டங் களுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 734 குடியிருப்புகள், 27.11.2021 அன்று அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவினால் மதிப்பீடு செய்யப் படும்.

திருவொற்றியூர் குடியிருப்பில் 27ஆம் தேதி கட்டடம் இடிந்து விழுந்தது. அங்கிருந்த ஒரு பிளாக் கில் 24 குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. எனவே மீதமுள்ள 62 திட்டங்களுக்கு உட்பட்ட 17 ஆயி ரத்து 734 குடியிருப்புகளை உடன டியாக ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.

அதன்படி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர நிலை கருதி, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுக்களை வாரியம் நியமிக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 குழுக்களிலும் அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர் இருப் பார்.

இந்த குழுக்கள் தங்களின் ஆய்வு பணியை முடித்து 31ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதோடு, தினமும் மாலை 5 மணிக்குள் தலைமையகத்திற்கு அன்றைய பணிகள் பற்றிய நிலவ ரத்தை தெரிவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment