சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு

கடற்கரை சாலைகளில் செல்லத் தடை காவல்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை, டிச. 29- சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாந கர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த வும், தற்போது பரவிவரும் உரு மாறிய ஒமைக்ரான் வைரஸ் பர வலை தடுக்கவும் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊர டங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும், விழா காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடங்களில் வெளியில் ஒன்று கூடுவதால், கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக் கக்கூடும் என்பதால், பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றி லும் தவிர்க்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாடுகள்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், வருகிற 31ஆம் தேதி இரவு புத் தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரை கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* 2022-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பதையொட்டி, 31ஆம் தேதி யன்று இரவு சென்னை பொது மக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சென்னை யில் அனைத்து மக்களும் புத் தாண்டை கொண்டாடும்பட்சத் தில், தற்போதைய கரோனா மற் றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, கரோனா நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து, மற்றவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் கொண்டாடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.

வாகனங்களுக்குத் தடை

* பொதுமக்கள், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலி யட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற் றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்றுகூட வேண்டாம்.

* 31ஆம் தேதியன்று இரவு 9 மணி முதல் சென்னையில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்படும்.

புத்தாண்டு வர்த்தக

நிகழ்ச்சிகள்...

* கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங் களை நிறுத்தி புத்தாண்டு கொண் டாட்டங்களை கொண்டாடக் கூடாது.

* ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத் தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சி களை நடத்தக்கூடாது.

No comments:

Post a Comment