தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் நூல்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் நூல்கள் வெளியீடு


படம்: 1 தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்  விழாவில் 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆண்டு விழா மலரை திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார். Worthy Living why and How? Asiriyar K. Veeramani அவர்களால் எழுதப்பட்ட நூலினை, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டார். "வாழ்வியல் சிந்தனைகள்" (தொகுதி - 16) (ஆசிரியர் கி. வீரமணி)   நூலை இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் வெளியிட்டார். Carry torch forward - Asiriyar K. Veeramani எனும் நூலினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு மானமிகு முனைவர் . பொன்முடி வெளியிட்டார்.

படம்: 2  திராவிடர் கழக உறுப்பினர் அட்டை 2ஆம் தவணையாக விழா மேடையில் கழகத் தலைவரால் அளிக்கப்பட்டது. 

படம்: 3 அரூர் ராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழகம்,  வாசுதேவன்  (தி.மு.) ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சால்வை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.  ஈரோடு சண்முகம், கன்னியாகுமரி வெற்றிவேந்தன்,  ராஜபாளையம் திருப்பதி ஆகியோர் விடுதலை சந்தாக்கள் வழங்கினர்.


No comments:

Post a Comment