எம்.நடராஜன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

எம்.நடராஜன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனையாலும், நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் நிர்வாக அனுசரணையாலும், கல்வி வள்ளல் காமராஜ் அவர்களின் அனுமதியாலும், டாக்டர் மலல சேகரா (அகில உலக புத்தமதத் தலைவர்), நடிகவேள் எம்.ஆர்.ராதா, டிக்காராம், எம்..எம்.ராமசாமி, கவியரசு கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.ஆர்.பந்துலு போன்றவர்களின் உதவியாலும் கல்விப் பணிபுரிந்த ஆதம்பாக்கத்தின் கல்வித் தந்தையும், திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி நிறுவனரும், 23.9.1954இல் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் எஜூகேசன் டிரஸ்ட் நிறுவியவரும், தாம்பரம் திருவள்ளுவர் குருகுலப் பள்ளியின் முன்னாள் டிரஸ்டியுமான  எம்.நடராஜன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில் அவரையும், (அவருடைய வாழ்விணையர் என்.மணிமேகலையையும்) நினைவுகூரும் வகையில் (துணைவி: என்.வாசுகியம்மாள் - மறைவு)  மகள்கள்: என்.கலைமணி, .என்.மணிமேகலை, டி.சவரியப்பன் ஆதம்பாக்கம், என்.தமிழ்மணி, என்.நவநீதமணி, என்.ஞானமணி, என்.பாரதமணி ஆகியோர் இந்த 100ஆவது (29.10.1921 - 29.10.2021) பிறந்த நாளின் மகிழ்வை கொண்டாடும் வகையில் திருச்சி அருகில் சிறுகனூரில் அமைய உள்ள தந்தை பெரியார் உலகத்திற்கு மகிழ்வுடன் ரூ. 15,000/- நன்கொடையாக வழங்கினர்.

No comments:

Post a Comment