இந்த ஆண்டு தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யான ஆண்டாகும். டாக்டர் கி. வீரமணி அவர்களின் பெரு முயற்சிகளினால் சமூக நீதிக் கான ஓர் சிறப்பான அரசு தமிழ் நாட்டில் பொறுப்பேற்றுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஜாதி உயர்வு, தாழ்வு முறைக்கு முடிவு காணும் வகையில் "அனைத்து ஜாதியினரும்" இந்து கோவில்களில் அர்ச்சகராகலாம் என்ற சட்ட அமுலாக்கம் திராவிட இயக்கத்தின் மாபெரும் வெற்றி யாகும். இந்த வேளையில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும் நமது தலைவரின் சாதனைகள், ஒரு சம நீதியுள்ள சமூகம் உருவாக மேலும் மேலும் தொடரவேண்டும். தமிழ்நாட்டில், இந்தியாவில் மட் டும் அல்லாமல் உலகளாவிய நிலையில் ஒப்பற்ற சிந்தனை யாளர் பெரியாரின் என்றென்றும் பயன்படும் மனித நேய கோட்பாடுகளை மிகச் சிறப்புடன் கொண்டு செல்லும் நமது பேரன்புமிக்க தலைவரை வணங்கி வாழ்த்தி மகிழ்வோம்.
- மு . கோவிந்தசாமி AISP., M. A.
தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு. மலேசியா.
தலைவர், தோட்ட நிர்வாகிகள் மன்றம் (சபா), மலேசியா.
No comments:
Post a Comment