இடுகாட்டுக்கு உடலை சுமந்த கொள்கை வீராங்கனைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

இடுகாட்டுக்கு உடலை சுமந்த கொள்கை வீராங்கனைகள்!

கோவை தெற்கு பகுதி திராவிடர் கழக செயலாளர் தெ.புண்ணிய மூர்த்தி (வயது 56) மாரடைப்பால் 24.12.2021 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது உடலுக்கு 25.12.2021 அன்று மாலை ஆத்துப்பாலம் மின் மயானத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

முழுக்க முழுக்க பெண்களே சுமந்து சென்று மின் மயானத்தில்  அவரது உடலை எரியூட்டினார்கள்.

கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மண்டலச் செயலாளர் .சிற்றரசு, மாவட்டத் தலைவர் .சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் தி..செந்தில்நாதன், மண்டல மகளிரணி . கலைச்செல்வி, மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வம், மாநகர தலைவர் புலியகுளம் .வீரமணி, கோவை பகுதி செயலாளர் தமிழ்முரசு  மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment