ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை,டிச.30- ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் திசம்பர் திங்கள்  23  ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நான்கு மணியளவில்  ஊற் றங்கரை நெடுஞ்சாலை துறை பயணி யர் மாளிகையில் நடைபெற்றது

இக் கூட்டத்திற்கு முன்னதாக ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் வரவேற்புரை யாற்ற  ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி தலைமை தாங்கி உரையாற்றினார்.

கழக  சொற்பொழிவாளர் பழ.வெங்கடாசலமும்  தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபுவும் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வழிகாட்டல் உரை வழங்கினர்

ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி, ஒன்றிய துணை தலைவர் ஆசைத்தம்பி, ஊற் றங்கரை நகர செயலர் முனி.வெங்க டேசன் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்   சித.அருள், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சீனிமுத்து.இராஜேசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலர் வே.முருகேசன்  ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கோபால் மாதேஸ் வரன், குழந்தைவேல்  ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார் இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன

1.     தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்களை பெருமளவில் திரட்டி ஆசிரியர் அவர்களிடம் பிறந்தநாள் பரிசாக வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது

2.   2022ஆம் ஆண்டு  பிப்ரவரி 11 ஆம் தேதி  தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருக தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் நிகழ்வு களில் அனைத்து தோழர்களும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது

3.    கிருஷ்ணகிரியில் அமைக்க படவிருக்கும் பெரியார் படிப்பகத் திற்கு நிதி வழங்குவதென முடிவு செய்யபட்டு கலந்துரையாடல் கூட்டத்தில் தமது பங்களிப்பை அறிவித்து வழங்கிய ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கோபால் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

இக் கூட்டத்தில்  கழக  சொற்பொழிவாளர் பழ.வெங்கடா சலம் தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபு ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ், ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பா சாமி, ஒன்றிய துணை தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர்   சித.அருள், ஊற்றங்கரை நகர செயலர் முனி .வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சீனிமுத்து.இராஜேசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலர் வே.முருகேசன்  ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கோபால் மாதேஸ்வரன், குழந் தைவேல்  உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment