வடக்குத்துவில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் "கற்போம் பெரியாரியம்", "ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன்" நூல் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 30, 2021

வடக்குத்துவில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் "கற்போம் பெரியாரியம்", "ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன்" நூல் அறிமுகம்

வடக்குத்து, டிச.30 வடக்குத்து இந்திரா நகரில் ஓம் முருகா அகாடமியில் 24 12 2021 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை  கழக சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்பு கருத்தரங்கமும் ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை கற்போம் பெரியாரியல் நூல்கள் அறிமுக நிகழ்ச்சியும் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி தலைமையில் மண்டல செயலாளர் நா. தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது.

 மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார்.

 கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கருத்தரங்க சிறப்புரை ஆற்றினார் .

வடலூர் புலவர் சு ராவணன் ,மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் ,மாவட்ட மாணவரணி தலைவர் ரேவந்த் ஆண்டனி ,மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு ,இந்திரா நகர் கிளை தலைவர் தங்க பாஸ்கர், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் இரா மாணிக்கவேல், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடலூர் செயலாளர் குணசேகரன், வடலூர் இந்திரஜித், மகளிர் அணியைச் சேர்ந்த கலைச்செல்வி விஜயா ,திராவிடமணி கோபாலகிருஷ்ணன் ,ஓவியா தொமுச மேனாள் தலைவர் மீரா ராமச்சந்திரன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், வடக்குத்து திமுக தர்மலிங்கம், கவிஞர் சந்திப், கடலூர் மாதவன் ஆகியோர் உரையாற்றினர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

ரூ.500 விலை உள்ள நூல்களின் தொகுப்பை ஏராளமானோர்  பெற்று கொண்டனர்.

No comments:

Post a Comment