89 ஆவது பிறந்த நாளை காணும் அய்யா கி. வீரமணி அவர்களுக்கு' மலேசிய திராவிடர் கழக தோழர்களின் சார்பில் அகவை நாளில், பல அகவை நாளை காண வேண்டுமென வாழ்த்துகிறோம்.
தந்தை பெரியாரின் அடிச்சுவட்டை பின் பற்றி பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிட தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் தனது வாழ் நாளை செலவிட்டதின் பலன், இன்று ஆலமரம் பல விழுதுகளுடன் தாங்கி இறுக்கத்துடன் பீடு நடைபோடுவதற்கு, அய்யாவின் தனி பாணியும் துணையிருந்தது என்றால் மிகையாகாது.
தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் பணி என்பது எந்த அளவுக்கு உலகமெல்லாம் பெரியாரின் கருத்துக்கள் வேரூன்றி பரவுவதற்கு அய்யாவின் கடும் முயற்சிக்கு தலை வணங்கவேண்டும்.
மலேசிய திராவிடர் கழகம் தங்களுடைய அயராத உழைப்புக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று வாழ்த்தி பெருமைப்படுகிறோம்!
அன்புடன்,
ச. த. அண்ணாமலை,
தேசியத் தலைவர்.
மலேசிய திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment