போற்றுதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

போற்றுதல்!

எங்கள்இதயம் நிறைந்த

இனமான ஆசிரியர்!

விடுதலை ஏடுகாணும்

விடிவெள்ளி!

மூடநம்பிக்கை ஒழிப்பின்

மும்முரம்காட்டும்

வெற்றிமுரசு!

தமிழர் இனமானம்

காப்பதில்

தந்தைக்கு ஏற்ற தனயன்!

சனாதனத்தை தோலுரிக்கும்

சண்டமாருதம்!

பகுத்தறிவுசிந்தனையில்

தந்தை பெரியாரின்

வழிபயணம்!

ஆசிரியரின்

அகவை என்பது

எண்பத்தொன்பது

அவை ஆண்டுக்கணக்கு

மட்டுமல்ல

அறிவின் விசாலம்!

சிந்தனை பிரவாகம்!

கருப்புச்சட்டைக்குள்

ஒளிரும் வெள்ளை உள்ளம்!

கடிகார முள்கூட

சுற்றிவந்து நின்றுவிடும்எங்கள்

கழகத்தலைவருக்கு

ஒருபொழுதும்

ஓய்வில்லை! உறக்கமில்லை!

எப்போதும் தமிழர்நலன்!

என்றென்றும் பொதுத்தொண்டு!

வணக்கமும்! வாழ்த்துகளும்!

போற்றுதலுமாக!

கவிமுகில் பெ.அறிவுடைநம்பி

திண்டுக்கல்!

No comments:

Post a Comment