தமிழ்நாட்டில், அரசு பணியாளர் தேர்வில் தமிழ் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு என்ற அர சாணை இன்று (3.12.2021) மனித வள மேலாண்மைத் துறைமூலம் தமிழ்நாட்டில் வெளியாகி இருப்பது மிகவும் வரவேற்றுப் பாராட்டத்தகுந்த ஏற்பாடு - ஆணை யாகும்!
தமிழ்நாட்டின் அரசுப் பணிகள் எதுவாயினும் - எத்துறையாயினும், தமிழில் படித்து, தமிழ் கற்றி ருப்பது என்பது மிகவும் முக்கியத் தேவையாகும். காரணம், தமிழ்நாட்டு மக்களிடம் உரையாடியும், பணி செய்யவும் வாய்ப்புப் பெற்றவர்கள், தமிழே தெரியாதவர்களாக - பிற மாநிலத்தவராக இருந்தால், பயன் விளைய முடியாது.
எனவே, நீண்ட கால நம் கோரிக்கை (11.11.2017 இல் இதுகுறித்து 'விடுதலை'யில் அறிக்கை வெளியிடப்பட்டது) இந்த ஆணையின்மூலம் செயல்வடிவம் பெறுகிறது; இதற்காக நமது முதலமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு தி.மு.க. அரசையும் பாராட்டுகிறோம்.
தமிழ்நாடு தேர்வாணையம் முழுமையான கவனத்தை இதில் செலுத்தி, நடைமுறையில் இந்த ஆணையின் நோக்கம் நிறைவேற எல்லா முயற்சிகளையும் செம்மையுறச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
சென்னை
3.12.2021
No comments:
Post a Comment