நெருக்கடிநிலை கால சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்தவர் ஆசிரியர்
திராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89 ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
பெரியார் எனும் பெரும்பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர்.
பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைத் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்.
சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காதப் போராளி.
முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல்.
நெருக்கடிநிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி.
எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.
11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக்கொடியை 89 ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர்.
தாய்க்கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க!
தொண்டறம்தொடர்ந்திடுக!
என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment